திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமைச்சராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறுகையில், உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து மூத்த தலைவர்கள் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆர். எஸ். பாரதி உள்ளிட்டோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திவிட்டதாகவும் அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
மேலும், சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக சென்னையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு, துறை ஒதுக்கீடு செய்வது குறித்து தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், ஏற்கெனவே முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் அமைச்சர்களாக இருப்பதால், உதயநிதியையும் அமைச்சராக்குவதில் எந்த இடையூறும் இருக்காது.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் முதல் வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்பார் என்றும் இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது என்றும் இதுகுறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் விரைவில் அவர் அமைச்சராக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


