/

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திரம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:09 am

DIN



ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆந்திரம் மாநில ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபரலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில்,  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Hearty Greetings to Hon'ble Chief Minister of Andhra Pradesh Thiru. @ysjagan on his 50th Birthday.

Wishing you peace, good health and happiness always on this special day.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஆந்திரம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது 50 ஆவது பிறந்தநாளில், அவருக்கு எப்போதும் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.