இலங்கையிலிருந்து மேலும் 13 பேர் தமிழகம் வருகை
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 13 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.


பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 13 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு, அதன் விளைவாக உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் இருந்து கடல்வழிப் பயணமாக அங்குள்ள தமிழர்கள் தமிழகம் வருகின்றனர்.
நேற்று, கர்ப்பிணி மற்றும் ஒரு குழந்தை உள்பட 13 பேர் தமிழகம் வந்துள்ளனர். இதையடுத்து, இதுவரை 55 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இவா்கள் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் தனுஷ்கோடிக்கு வந்த அவர்களை ராமேஸ்வரம் கப்பற்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...