சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சங்ககிரி: பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

News image
சங்ககிரி அருள்மிகு சென்னகசேவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Updated On :28 ஜனவரி 2024, 4:10 am

DIN


சங்ககிரி:  சேலம்ம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி,  ஸ்ரீபூதேவி சுவாமிகள், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் சுவாமிகள்,  ஒருக்காமலையில் உள்ள குடைவரை கோயிலில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கு  சனிக்கிழமை அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள்  செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

Story image

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சங்ககிரி  மலை மீது உள்ள அருள்மிகு சென்னகசேவப்பெருமாள் கோயில் வளாகம் முன்பு  ஏற்றப்பட்டுள்ள திருக்கோடி விளக்கு. 

பின்னர் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

சங்ககிரி மலை மீது  உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கோடி விளக்கு கோயில் அர்ச்சகர்களால் ஏற்றப்பட்டன. 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படி கோயில் அர்ச்சகர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.