நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சங்ககிரி பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனிக்கிழமை சிறப்பு பூஜைகள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. 

News image
சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராஜபெருமாள் சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
Updated On :28 ஜனவரி 2024, 4:20 am

DIN


 
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது. 

சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி,  ஸ்ரீபூதேவி கோயில், வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லபராஜப்பெருமாள் கோயில், ஒருக்காமலையில் உள்ள குடைவரை கோயிலில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் பாதங்கள், திருநாமங்களான சங்கு, சக்கரங்களுக்கும் புரட்டாசி  மாத 4 ஆவது வார சனிக்கிழமையொட்டி அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள்  செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

பின்னர் சங்ககிரி வி.என்.பாளையத்தில் உள்ளஅருள்மிகு ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப் பெருமாள் சுவாமிகள்,  அதே கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சுவாமிகளின் உற்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேவசப்பெருமாள் கோயிலில் அதிகாலையில் கோயில் அர்ச்சகர்களால் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.  

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின் படி அனைத்து கோயில்களிலும் அர்ச்சகர்கள் மட்டுமே பூஜைகளை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.