தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை (நவ.6) விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்கெனவே நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 6-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால், தீபாவளி பண்டிகைக்காக தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தீபாவளிக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் செல்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி வரவேற்பு
வெளியூர் சென்று விழாக்களை சிறப்பாக கொண்டாடும் வகையில் விடுமுறை வழங்கிய தமிழக முதல்வருக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தினரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினரும் நன்றியினையும் வரவேற்பினையும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

