ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

39 தமிழக மீனவர்களை சிறைப்பிடித்து இலங்கை அத்துமீறல்

எல்லை தாண்டியதாகக் கூறி தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 39 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:50 pm

DIN

எல்லை தாண்டியதாகக் கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் 2 படகுகளுடன் காங்கேசன்  துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை காலையில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இன்று அதிகாலை கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளில் இருந்த மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 

புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு காரைநகர் கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்றும், காரைக்காலைச் சேர்ந்த 6 மீனவர்கள் ஓரு படகுகளுடன் திரிகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 39 பேர் 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் பாபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லை தாண்டியதாகக் கூறி இந்தாண்டில் முதல்முறையாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு அமைப்பு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தமிழக மீனவர்களிடம் இலங்கை அத்துமீறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.