புதுவையில் நேற்று 3 மாதங்களுக்கு பிறகு கரோனா உயிரிழப்பு பதிவாகாத நிலையில், 4 மாதங்களுக்குப் பின் இன்று புதிய பாதிப்பு 100-க்குள் பதிவாகியுள்ளது.
புதுவையில் இன்று புதிதாக 81 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தலா ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,771 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 4,214 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 81, காரைக்காலில் 6, ஏனாமில் 1, மாஹேயில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, புதுவையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின் கரோனா பாதிப்பு நூறுக்குள் பதிவாகியுள்ளது. கடைசியாக மார்ச் 25ஆம் தேதி புதுவையில் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மருத்துவமனைகளில் 246 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,167 பேரும் என மாநிலம் முழுவதும் 1,413 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே 171 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,15,873-ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


