2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

2 ரவுடிகளை கொலை செய்த வழக்கு: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 4 பேர் கைது

பட்டப்பகலில் இரண்டு ரவுடிகளை கொலை செய்த வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 7:31 pm

DIN


ஈரோடு: பட்டப்பகலில் இரண்டு ரவுடிகளை கொலை செய்த வழக்கில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கலை என்கிற கலைச்செல்வன். இவரது நண்பர் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த குணா என்கின்ற குணசேகரன். 2018 இல் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய கலை, குணா இருவரையும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பட்டப்பகலில் வீரப்பன்சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் வைத்து வீச்சரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துவிட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் வழக்கு தொடர்பாக நடிகர் விஐய் ரசிகர் மன்ற நிர்வாகி கார்த்தி, வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த  வேட்டையன் ரவி, அழகிரி மற்றும் மதன் உள்ளிட்ட 4 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.