டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சியில் சிறப்பு ரயில்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியது

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கியது.

News image
திருச்சி ஜங்ஷன் ரயில்நிலைய முன்பதிவு மையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு பெற சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்கும் பயணிகள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:15 pm

DIN

திருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கியது.

ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் திருச்சியில் கிருமி நாசினி கொண்டு ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ரயில்நிலையத்துக்குள் அமைந்துள்ள இருப்புப் பாதைகளும் சரிபார்க்கப்பட்டு ரயில்கள் வந்து, செல்ல ஒத்திகையும் நடைபெற்றது. 

பாதுகாப்பு ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சனிக்கிழமை முதல் பயணச்சீட்டு முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.  

பயணச்சீட்டு பெற வரும் பயணிகள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது. பயணிகள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பயணச்சீட்டுகளை பெற்றுச் சென்றனர்.

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் 10 கவுன்ட்டர்கள் உள்ளன. இதில், சனிக்கிழமை 5 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டன. 

தேவைக்கேற்ப அனைத்து கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டு பயணிகளுக்கு முன்பதிவு பயணச்சீட்டுகளை வழங்க தயாராக இருப்பதாக ரயில்நிலைய அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.