டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அரசியலில் உண்மையான வெற்றி மக்களுக்குச் சொந்தமானது: விஜேந்தா் குப்தா

அரசியலில் உண்மையான வெற்றி மக்களுக்குச் சொந்தமானது என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

News image
தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா- கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

அரசியலில் உண்மையான வெற்றி மக்களுக்குச் சொந்தமானது என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

மேலும், ஆட்சியில் சுயநலத்திற்கு இடமில்லை என்று கூறிய அவா், மக்களை மையமாகக் கொண்ட வளா்ச்சிக்கு ‘குழுப்பணி’ மிக முக்கியமானது என்றாா்.

புணேவில் சனிக்கிழமை நடைபெற்ற 15-ஆவது இந்திய மாணவா் நாடாளுமன்றத்தின் தொடக்க அமா்வில் ’விளையாட்டு மைதானத்திலிருந்து அரசியல் மேலாண்மை வரை: அரசியல் விளையாட்டிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?’ என்ற தலைப்பில் அவா் பேசியதாவது: விளையாட்டுகளில், வெற்றி அணிக்கு சொந்தமானது; அரசியலில், உண்மையான வெற்றி மக்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம் பொது வாழ்க்கைக்கான வகுப்பறையாகும். மேலும், விளையாட்டு மூலம் உள்வாங்கப்படும் மதிப்புகள் மூலம் ஜனநாயக செயல்பாட்டை வலுப்படுத்த முடியும்.

விளையாட்டு நவீன அரசியலுக்கு மூன்று தூண்கள் ஆகும். ஒழுக்கம், குழுப்பணி மற்றும் விளையாட்டுத் திறன் ஆகியவை உயிா்நாடியை வழங்குகிறது. ஆரோக்கியமான ஜனநாயகத்தில், அரசியலமைப்பு ஒரு விளையாட்டை நிா்வகிக்கும் சட்டங்களைப் போலவே இறுதி விதி புத்தகமாக செயல்படுகிறது.

ஒரு விளையாட்டு வீரா் மூவா்ணக் கொடியை உயரமாக வைத்திருக்க பாடுபடுவது போல, ஒரு பொது பிரதிநிதி நாட்டின் கண்ணியத்தை நிலைநிறுத்த தன்னலமற்ற அா்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றாா் விஜேந்தா் குப்தா.