தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவேம்புக் குடிநீர் வழங்குவதால் நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. தொந்த சுரக் குடிநீர், சர்வ சுரக் குடிநீர் ஆகியவற்றை அதிகம் நான் பயன்படுத்தி வருகிறேன். தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் பொடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலவேம்புக் குடிநீர் இல்லாதபட்சத்தில் துளசி, வேப்பிலை, மிளகு, வெற்றிலை சேர்த்துக் குடிநீர் செய்து பயன்படுத்தலாம். தற்போதைய சூழலில் தமிழக அரசு சித்த மருத்துவர்களுக்குத் தளம் அமைத்துத் தர வேண்டும். கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்கள் கண்காணிப்போடு நிலவேம்புக் குடிநீருடன் லிங்கம், தாளவாகம் உள்ளிட்ட மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தமிழகத்தில் நிலவேம்புக் குடிநீர் மூலம் தொற்று நோயைத் தடுத்ததை முன் மாதிரியாகக் கொண்டு இந்தியா முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும் என்றார் மைக்கேல் செயராசு.