டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சங்ககிரி ஸ்ரீ ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

News image
ஆடிப்பூரத்தையொட்டி சங்ககிரி அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் சுவாமிகளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை 108 லிட்டர் பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு, சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. 

பூஜையில்  பெண்கள் அணிவதற்கான வளையல்கள், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்கலப்பொருள்களும்,  ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி கூழ் தயார் செய்தும்  சுவாமிகளுக்கு படைக்கப்பட்டன. 

ஒவ்வொரு வருடமும் இக்கோயிலில் ஆடிப்பூரவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. நிகழாண்டு கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி பக்தர்கள் இல்லாமல் பூசாரி மட்டுமே பூஜைகளை செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.