ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடியக்கரை கடலில் மிதவையில் அமர்ந்து தியானம் செய்தவரிடம் போலீசார் விசாரணை!

நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பரப்பில் ஒருவர் மிதவையில் அமர்ந்து 4 நாள்களாக தியானத்தில் ஈடுபட்டு வந்தது  போலீஸாருக்கு வியாழக்கிழமை தெரிய வந்தது.

News image
மிதவையில் அமர்ந்து தியானம்
Updated On :27 ஜனவரி 2024, 3:45 pm

கே.பி. அம்​பி​கா​பதி

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரை கடல் பரப்பில் ஒருவர் மிதவையில் அமர்ந்து 4 நாள்களாக தியானத்தில் ஈடுபட்டு வந்தது  போலீஸாருக்கு வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை உடனடியாக கரையேற  அறிவுறுத்தியுள்ளனர்.

கோடியக்கரையில் தொடங்கிய சாகர்  கவாச் ஆப்பரேஷனையடுத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  அப்போது, கோடியக்கரை படகுத்துறைக்கு தென் மேற்கே சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு மிதவை மிதந்தது தெரிய வந்தது.

பாலித்தீன் பெட்டிகள் இ ணைத்து உருவாக்கப் பட்டிருந்த அந்த மிதவையின் மேல் பகுதி மூங்கில்களால் செய்யப்பட்ட குடில் போல் காணப்பட்டது. அதில் இருந்தவர்  நாகூர் பட்டினச்சேரி  கலியபெருமாள் ( 65) என்பது தெரிய வந்தது.

விசாரணையில் கரையோர நண்டுகளைப் பிடிப்பதோடு, மன அமைதிக்கு தியானம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.  இதையடுத்து அவரை உடனடியாக கரைக்கு திரும்ப கடலோரக் காவல் ஆய்வாளர் ஜோதிமுத்துராமலிங்கம் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக தனிப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.