ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து
இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


சென்னை: இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினி இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், நடிகர், நடிகைகளும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.
அதில், "திரு. ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...