சென்னை: பிற நாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப விரும்புவோர்க்காக தமிழக அரசு தனி இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 33,062 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,079 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப விரும்புவோர்க்காக தமிழக அரசு தனி இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:
கரோனா ஊரடங்கின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர தரப்பினர் வெளிநாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப முடியாமல் உள்ளனர்.
எனவே தற்போது தமிழகம் திரும்ப விரும்புபவர்கள் தங்களது விபரங்களை www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எத்தனை பேர் ஊர் திரும்ப விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கான மற்ற ஏற்பாடுகளைத் திறம்பட செய்ய இயலும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

27.4.1976: தமிழ் நாட்டில் 98.3% கிராமங்கள் மின் வசதி பெற்றன
ஈரானுடன் அமைதி பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டா்கள்! - அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சேலத்தில் ‘ரிக்’ தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


