ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஊரடங்கில் விழிப்புணர்வு சிறு நாடகங்களை அரங்கேற்றும் சிறுவர் - சிறுமியர்

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த ஊடரங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்–சிறுமியர்,

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:33 pm

பெரியார் மன்னன்

கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த ஊடரங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீட்டிற்குள் முடங்கியுள்ள சிறுவர்–சிறுமியர், பல்வேறு விழிப்புணர்வு சிறு நாடகங்களை நடித்து வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினரிடையேயும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

நாடுமுழுவதும் கரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ந் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, சிறுவர்–சிறுமியர் உட்பட அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான சிறுவர்–சிறுமியர், இத்தருணத்தை பெற்றோர்கள் மனம்விட்டு பேசி பல்வேறு தகவல் குறித்து கேட்டறியவும், வீட்டிலுள்ள பெரியவர்களிடம் நன்னெறி கற்பிக்கும் கதைகளை கேட்பதற்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதுமட்டுமின்றி, ஏராளமான சிறுவர்–சிறுமியர், வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை வழிகாட்டுதலுடன் கைப்பேசிகளை பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறு நாடங்கள் நடத்தி, இவற்றை முகநுால்  வாட்ஸ்அப், யூடியூப் போன்ற வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது அனைத்து தரப்பினரிடையேயும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வாழப்பாடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்–சிறுவர், கரோனா வைரஸ் தடுப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ‘ஊடரங்கு’ என்னும் சிறுநாடகமும்,  ‘அப்பாவிற்கு உதவிய குழந்தைகளின் ‘சிறுசேமிப்பு’ என்ற சிறுநாடகமும் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 ஊரடங்கு நேரத்தில் வீட்டிற்குள் இருந்தபடியே, மற்ற சிறுவர்–சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தத்ரூபமாக சிறு நாடங்களை நடித்து, வலைதளங்களில் பதிவிட்டு வரும் இச்சிறுவர் சிறுமியருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.