2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஒசூரில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

கரோனா ஊரடங்கினால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் காய்கறிகளைப் பயிர் செய்திருந்த

News image
அறுவடை செய்யாமல் நிலத்தில் விடப்பட்ட முட்டைகோஸ்
Updated On :27 ஜனவரி 2024, 4:26 pm

டி.ஞானபிரகாசம்


கரோனா ஊரடங்கினால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் காய்கறிகளைப் பயிர் செய்திருந்த விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் கோட்டம் கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளதால் இங்கு ஆண்டு முழுவதும் (ஏப்ரல், மே மாதங்களைத் தவிர குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது. குறைந்தது 10 டிகிரி செல்சியஸ் முதல் 19 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ந்த சீதோஷண நிலை இருக்கிறது. இந்த குளிர்ந்த சீதோஷண நிலையைப் பயன்படுத்தி இங்குள்ள விவசாயிகள் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் காய்கறிகளைப் பயிர் செய்து வருகின்றனர்.

இங்குள்ள விவசாயிகள் கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காளிஃபிளவர், குடை மிளகாய், கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா, உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறிகளைப் பயிர் செய்து வந்தனர்.

இதனால் சிறிய விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை காய்கறிகளைப் பயிர் செய்து வந்தனர். மத்திய மாநில அரசுகளின் சார்பில் தோட்டக்கலைத்துறை  விவசாயிகளுக்குப் பசுமைக்குடில், சொட்டு நீர் பாசனம் போன்றவற்றுக்கு 100 சதவிகித மானியம் வழங்கி, புதிய தொழில்நுட்பங்களைத் தெரிவித்து காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு உற்ற தோழனாக விளங்கி வந்தது.

இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் ஒசூருக்கு வந்து லாரிகளில் நேரடியாகக் காய்கறிகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். இதனால் ஒசூர் பத்தளப்பள்ளி மொத்த அங்காடி மூலம் தினமும் 800 டன் காய்கறிகளை சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளா மாநிலம் முழுவதும், பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகளை அனுப்பி வைக்கப்பட்டன. 

அதேபோன்று ஒசூர் அருகே உள்ள சூளகிரி சந்தையிலிருந்து கொத்தமல்லி, புதினா போன்றவையும் ராயக்கோட்டை தக்காளி மண்டியிலிருந்து தினமும் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் விவசாயிகளும், சந்தை விலைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு விலை கிடைத்து வந்தது.

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்தால் இந்த காய்கறிகளைப் பயிர் செய்து விவசாயிகளின் வாழ்வில் நெருக்கடி ஏற்பட்டது. லாரிகள் இயங்கவில்லை, பேருந்து செல்லவில்லை. இதனால் காய்கறிகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விவசாய பயிர்களை அறுவடை செய்வதில் எந்தவித கட்டுப்பாடுகளும் அறிவிக்கவில்லை. 

வேளாண் விவசாயிகள் தங்களது பணியை தொடரலாம் என அறிவித்தாலும், நோய்த் தொற்று காரணமாகக் கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. இதனால் அனைத்து விதமான காய்களும் நிலத்தில் பறிக்காமல் அப்படியை உள்ளன. ஒரு சில விவசாயிகள் தங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் காய்கறி பறித்தாலும் அதனைச் சந்தைக்குக் கொண்டு செல்ல லாரிகள் கிடைப்பதில்லை. ஆனாலும் ஒசூர் உழவர் சந்தைக்குச் சிறிய விவசாயிகள் காய்கறிகளை அறுவடை செய்து காய்கறிகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து ஒசூர் பத்தளப்பள்ளியில் இயங்கி வரும் 220 மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ராஜா ரெட்டி நமது தினமணி செய்தியாளரிடம் கூறியது.
 
கடந்த 20 நாள்களாக பத்தளப்பள்ளி மொத்த காய்கறி விற்பனை அங்காடி மூடப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் தமிழகம், கேரளா, கர்நாடக, ஆந்திரா, மும்பை வரை காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்பொழுது ஊரடங்கினால் விவசாயிகள் தங்களின் நிலத்தில் பயிர் செய்திருந்த காய்கறிகளை அறுவடை செய்ய முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 

குறிப்பாக விவசாயிகள் சுமார் 4 ஏக்கர் காய்களைப் பயிர் செய்திருந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்திருந்தால் 4 ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் அடைந்துள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுபோன்று நஷ்டம் அடைந்து வாழ்வை இழந்துள்ளனர். இந்த ரூ.2 லட்சமும் வியாபாரிகளிடம் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள். வியாபாரிகள் கடனை கேட்டு தொந்தரவு செய்து வருவதால் அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் சு.பிரபாகர் வாழ்வை இழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசிடம் இருந்து உரிய நிவாரணம் பெற்றுத் தரவேண்டும். வாழ்வை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.