“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று மத்திய பா.ஜ.க. அரசு, இவ்வளவு காலம் தாமதம் செய்துவிட்டு, கடைசியாக உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனை- குறிப்பாக ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவியர் நலனை, துச்சமென மதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியது. 1.2.2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு- 18.2.2017 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அவர்களால் அனுப்பட்ட இந்த மசோதா குறித்து, 27 மாதங்கள் கழித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பு இப்போது இந்தத் தகவலை மத்திய அரசு கூறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.