மத்திய பொது பட்ஜெட்டை தமிழகத்தில் உள்ள வீடு மனை விற்பனையாளர்கள் சிறப்பாக ஆதரவு கொடுத்து வரவேற்றுள்ளனர்.
இது தற்போதைய வீடு, மனை விற்பனை தொழிலில் ஏற்பட்டிருக்கும் சரிவை பெரிய அளவில் தூக்கி நிறுத்த உதவும் என்றும் கருதுகிறார்கள்.
அதே சமயம், தமிழக அரசு முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைத்தால், அதன் முழு பலனை வீடு வாங்குவோர் அனுபவிக்க முடியும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.45 லட்சத்துக்கும் குறைவான மதிப்புள்ள வீடுகளை 15 ஆண்டுகால கடன் தவணையில் வாங்கும் போது வீடு வாங்குவோருக்கு ரூ.7 லட்சம் வரை வரி விலக்குக் கிடைக்கும் என்பது வரவேற்கத்தக்கதே.
இது விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என்று டெவலப்பர்ஸ் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 7 சதவீதம் முத்திரைத்தாள் கட்டணமும், 4 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மொத்தமாக 11 சதவீதம் என்பது தமிழகத்தில்தான். இது மிக அதிகமாகும்.
ஒன்று முத்திரைத் தாள் கட்டணத்தைக் குறைப்பது அல்லது அதனை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது என எதைச் செய்தாலும் மக்களுக்கு பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில்..
*2020 மார்ச் 31-ஆம் தேதி வரை வாங்கப்படும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்துகையில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரை கழிவு.
*அனைவருக்கும் வீடு திட்டத்துக்கான வட்டி மானியம் ரூ.3.5 லட்சமாக உயர்வு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


