சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தூத்துக்குடியில் புதுமண காதல் தம்பதி வெட்டிப் படுகொலை: பெண்ணின் தந்தை கைது

பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :4 ஜூலை 2019, 10:46 am


தூத்துக்குடி: பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமண காதல் தம்பதி பயங்கர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவத்தில், படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலைராஜ் (23), பேச்சியம்மாள் என்கிற ஜோதி (20) இருவரும் நேற்று இரவு வீட்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் 15ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டு பெரியார் காலனியில் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், சோலைராஜ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், ஜோதி பள்ளர் சமுதாயப் பெண். இரண்டு ஜாதியும் எஸ்.சி. பிரிவில் வந்தாலும், மக்களின் மனப்பான்மையில் பறையரை விட பள்ளர் சற்று உயர்ந்த ஜாதியாகக் கருதப்படுகிறார்கள். இந்த நிலையில்தான், பறையர் ஜாதியைச் சேர்ந்த சோலைராஜை, பள்ளர் இனப் பெண் ஜோதி திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் தந்தையே ஆணவப் படுகொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தம்பதியின் உடல்கள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.