சேப்பாக்கம் மைதானத்தில் சட்டவிரோத புகையிலை விளம்பரங்கள்: ராமதாஸ் எதிர்ப்பு!
சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்...


இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்கிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.
இந்நிலையில் பாமக நிறுவனா் ராமதாஸ் ட்விட்டரில் கூறியதாவது: சென்னையில் நாளை இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும் என்று கூறி விளம்பரங்களின் இரு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...