சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:05 pm

DIN

சென்னை: குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டையே பரபரப்புக்குளாக்கிய குட்கா ஊழல் தொடர்பாக குட்கா ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் சிவகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் 6 பேரையும் முதலில் அக்டோபர் 4 -ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. பின்னர் இந்த நீதிமன்றக் காவலானது வரும் 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குட்கா ஆலையின் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா மற்றும் சீனிவாசராவ் ஆகிய மூவரும் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவானது சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. 

இவர்களை ஜாமீனில் விடுவித்தால் அனைத்து சாட்சிகளையும் கலைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இவர்கள் மூவரின் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.