நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடை விழா: உதகையில் 2 நாள் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது

கோடை விழாவையொட்டி தோட்டக் கலைத் துறையின் சார்பில் உதகையில் 2 நாள் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

ஏ. பேட்ரிக்

கோடை விழாவையொட்டி தோட்டக் கலைத் துறையின் சார்பில் உதகையில் 2 நாள் ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியது. 

உதகை அரசினர் ரோஜா பூங்காவில் தொடங்கவுள்ள 2 நாள் ரோஜா மலர்க் காட்சியில் சுமார் 30 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு  பிரமாண்டமான உருவத்தில்  இந்தியா கேட் உருவமும்,  சோட்டா பீம் உருவமும்  அமைக்கப்பட்டுள்ளன.  

அதேபோல கிருஷ்ணகிரி,  மதுரை,  ஈரோடு, திருவண்ணாமலை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் தோட்டக் கலைத் துறை சார்பில் மலர்களிலான படகு, காளை மற்றும் மயில் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இந்தக் கண்காட்சியில் 53 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

உதகை ரோஜா கண்காட்சியை மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணிய சாம்ராஜ் முன்னிலையில் இன்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், மக்களவை  உறுப்பினர்  கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.