ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது புரியாத புதிர்: ரஜினிகாந்த்
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது,


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 48-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலை மூடப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அங்கு நாளை நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...