பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குரங்கணி தீ விபத்து: இழுத்து மூடப்பட்ட சென்னை ட்ரெக்கிங் கிளப் அலுவலகம்! 

ஒன்பது பேர் உயிரிழக்க காரணமான குரங்கணி தீ விபத்து சம்பவத்தில், சென்னையிலிருந்து 24 பேரை அழைத்துச் சென்ற 'சென்னை ட்ரெக்கிங் கிளப்' அமைப்பின் அலுவலகம்  இழுத்து மூடப்பட்டுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2018, 11:06 am

சென்னை: ஒன்பது பேர் உயிரிழக்க காரணமான குரங்கணி தீ விபத்து சம்பவத்தில், சென்னையிலிருந்து 24 பேரை அழைத்துச் சென்ற 'சென்னை ட்ரெக்கிங் கிளப்' அமைப்பின் அலுவலகம்  இழுத்து மூடப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனுர்  அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயிற்சியில் பங்கற்ற 36 பேரில் சென்னையில் இருந்து 24 பேர் சென்றுள்ளனர். இவர்களை 'சென்னை ட்ரெக்கிங் கிளப்' என்ற தன்னார்வ அமைப்பு அழைத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட உடன் மேலதிக தகவல்களை பெறுவதற்காக சென்னை பாலவாக்கத்தில் உள்ள அந்த அமைப்பை காவல்துறையினர் அணுகினர்.

ஆனால்  அந்த அமைப்பின்  அலுவலகமானது மூடப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் இணையதளத்தில் கூட அமைப்பை நடத்துபவர்கள் தொடர்பான எந்த விபரமும் கூறப்படவில்லை. அத்துடன் தொடர்புக்கு என ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு வெளிப்புற நிகழ்ச்சிகள், விளையாட்டு, சுற்றுச் சூழல் நிகழ்வுகள் மற்றும் சமூக செயல்பாடுகள் நடைபெறுவதாக கூறப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

தங்கள் லாப நோக்கமற்ற தன்னார்வலர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு என்றும் அத்தளம் தகவல் தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.