ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கோடை வெயிலுக்கு தண்ணீரை குளிர்விக்க மண் பானைகள், கூஜாக்கள் தயாரிப்பு மும்முரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோடை வெயிலுக்கு தண்ணீரை குளிர வைக்கும் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

News image
மானாமதுரையில் மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு தயாராகவுள்ள மண்ணால் தயாரிக்கப்பட்ட கூஜா மற்றும் பானைகள்.
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

வி. கருப்பையா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கோடை வெயிலுக்கு தண்ணீரை குளிர வைக்கும் மண்பானைகள், கூஜா வகைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 
மானாமதுரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மண்பாண்ட கலைப் பொருள்கள் தான். இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களுக்கு தமிழகம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது. 
மானாமதுரை நகரில் குலாலர்தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. சீசனுக்கு தகுந்தவாறு மண் பானைகள், அக்னிச் சட்டிகள், கார்த்திகை விளக்குகள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்பு வகைகள், பூந்தொட்டிகள், விநாயகர் சிலைகள், சமையல் செய்வதற்கான சட்டிகள் என பல வகையான மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு தயாராகும் மண்பாண்டங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதற்கு மானாமதுரை பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் தனித்தன்மையே காரணமாகும். 
தற்போது பனிக்காலம் முடிந்து கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், குடிநீரை குளிரச் செய்து மண் மணத்துடன் தரும் மானாமதுரை மண்பானைகள் மற்றும் கூஜாக்களுக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது. குளிர் சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் குளிர்ந்த குடிநீரை பயன்படுத்துவதற்கு பதில், இவ்வகை மண்பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து அந்த நீரை எடுத்து குடிக்கும்போது அது தனிச் சுவை கொண்டதாகவும் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கும். 
மண்பானைத் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை உணர்ந்துள்ள மக்கள் தற்போது அனைத்து பகுதிகளிலும் பரவலாக மண்பானைத் தண்ணீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 
இதற்காக மானாமதுரை பகுதியில் மண்பானைகள், விதவிதமான கூஜா வகைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு குழாய் இணைப்புடன் கூடிய கூஜாக்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மூடியைத் திறந்து தம்ளரில் தண்ணீர் எடுக்காமல் குழாயைத் திருகினால் தண்ணீர் வருவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நேரடியாகவும் வியாபாரிகள் மூலமும் இங்குள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் கொடுத்தும் மண் பானைகளை சந்தைப் படுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் மானாமதுரை வந்து ஆர்டர் கொடுத்து மண்பானைகள், கூஜாக்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். 
மண்பானை, கூஜாக்களின் விலை ரூ. 70 லிருந்து ரூ .200 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை பகுதியைச் சேர்ந்த மக்கள் வெளியூர்களில் வசிக்கும் தங்கள் உறவு முறைகளுக்கு பரிசாகவும் இந்த மண் பானைகள், கூஜாக்களை வாங்கி கொடுத்தனுப்புகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.