நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:23 pm

தி. இன்பராஜ்

2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அம்மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது 2016-2017 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஒரிரு நாளில் வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து 2015-2016 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதன்பின்னரே விவசாயிகள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.