மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு "பாரத ரத்னா' விருது வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து முறை முதல்வராகப் பதவி வகித்தவர். திரைப்படத் துறையில், சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபட்ட அவரின் குறிக்கோள் ஏழை மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண்பதாகும். அவரது ஆட்சி காலத்தில், மலிவு விலையில் அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவசமடிக்கணினி, மாணவர்களுக்கு சைக்கிள் என பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்தார். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக பாடுபட்ட அவருக்கு, நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருதை வழங்க வேண்டும். இதுதொடர்பாக, கடந்த டிசம்பர் 15 -ஆம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன். இந்த மனுவுக்கு, இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, "பாரத ரத்னா' விருது வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
யார், யாருக்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என முடிவு செய்வது, மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகும். அவருக்குத் தான் விருது வழங்க வேண்டும், இவருக்குத் தான் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரைக்கவோ, உத்தரவு பிறப்பிக்கவோ இயலாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

