2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உள்ளாட்சித் தேர்தல்: திமுக - அதிமுகவுக்கு இடையே கௌரவத்துக்கான போர்க்களம்!

உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைத்திடும் வண்ணமாக அதிமுக வெற்றி வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:21 pm

ஆர். வெங்கடேசன்

உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைத்திடும் வண்ணமாக அதிமுக வெற்றி வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இவை அதிமுகவினரிடையே பெருத்த மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்றுதான் அறிவித்தது. இதையடுத்து கடந்த நான்கு தினங்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, அதிமுக வெற்றி வேட்பாளர்களின் பட்டியலை இன்று அறிவித்து ஆச்சரியத்தை ஆனந்தத்தையும் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலில் வெற்றி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த முதல்வர் ஜெயலலிதா.  
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் அளவுதான் என்பதால், இந்த தேர்தலும் இரு கட்சிகளுக்கு இடையே கவுரவத்துக்கான போர்களமாகவே அமையும் என்று நம்பலாம்.
மாநில அரசுக்கு செல்வாக்கு இருப்பது போல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர்களுக்கும் அதிகாரம் இருப்பதால் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 529 பேரூராட்சகள், 31 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 385 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துத்துக்கள் என மொத்தம் 1,31,794 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 2 கட்டமாக அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் 2.88 கோடி ஆண்கள், 2.92 கோடி பெண்கள், 4,584 இதர வாக்காளர்கள் என 5.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் செலவுக்கான நிதி ரூ.182 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கி தமிழக அரசு அறிவித்தது. அதில் இதுவரை ரூ.107.69 கோடி நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் என்பது, தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முதல் மாநகரம் வரை நடைபெறக்கூடியது கிராமப் பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இருக்காது. மீதியுள்ள பொறுப்புகளுக்கு மாநகராட்சி கவுன்சிலர் வரை அந்தந்தக் கட்சியினருக்கு அங்கிகரிக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தல் களத்தில் கட்சி சார்ப்பற்றவர்களும், கட்சி சார்புள்ளவர்களும் இருப்பார்கள். மாநில அரசுக்கு செல்வாக்கு இருப்பது போல், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தலைவர்களுக்கும் அதிகாரம் இருப்பதால் இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பையும் போட்டியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்துக்கு தமிழகத்திலிருந்து 30 உறுப்பினர்களும், சட்டப்பேரவைக்கு 234 உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1 லட்சத்து 32 ஆயிரத்து 58 அரசு பதவிகள் உள்ளன. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடையே போட்டி மட்டுமல்ல ஒரு சிறிய தேர்தல் போர் ஏற்படும்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம் அளவுதான் என்பதால், இந்த தேர்தலும் இரு கட்சிகளுக்கு இடையே கவுரவத்துக்கான போர்க்களமாகவே அமையும்.

தமிழக தேர்தல் களம் இன்று முதல் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்து தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.
போர்க்களத்தில் வெற்றி வாகையை சூடப்போவது அதிமுகவா, திமுகவா என்பதை அறிய அக்டோபர் 21-ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.