ஆம்பூர் : ஆம்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்ரமணி 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆம்பூர் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டன. மொத்தம் 18 சுற்றுகள் வாக்குகள் 14 மேஜைகளில் எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குப் பெட்டி திறக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கப்பட்டது.
ஆம்பூர் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,61,179. இதில் பதிவான தபால் வாக்குகள் 734 ஆகும். அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி 79,182 வாக்குகளும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வி.ஆர். நசீர் அஹமத் 51,176 வாக்குகளும் பெற்றனர்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை நோட்டாவிற்கு 1632 வாக்குகள் பதிவாகியுள்ளது. பதிவான தபால் வாக்குகளில் 104 வாக்குகள் செல்லாதவை.
வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி முன்னிலையில் இருந்து வந்தார். 18 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 28,006 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் வி.ஆர். நசீர் அஹமத் தவிர மற்ற தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட 13 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
அதிமுக வேட்பாளர் ஆர். பாலசுப்பிரமணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆம்பூர் தேர்தல் பார்வையாளர் (பொது) கலேந்திர மோச்சாரி முன்னிலையில் ஆம்பூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கொ. கந்தசாமி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

