மண்டபம் முகாமில் உண்ணாவிரதத்தை கைவிட்டார் இலங்கைப் பெண்
கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அகதிப்பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.


கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அகதிப்பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் கடந்த 3 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
மூத்த அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்ததன் அடிப்படையிலும், மதிமுக பொதுச் செயலாளர் அனுப்பிய வழக்குரைஞர் கொடுத்த உறுதி மொழியாலும், உதயகலா தனது உண்ணாவிரதத்தை செவ்வாய்க்கிழமை மாலை முடித்துக் கொண்டார்.
இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்தவர் தயா புஷ்பராஜ் (32). இவரது மனைவி உதயகலா (30). இவர்களிருவரும் தங்களது இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு ராமேசுவரத்துக்கு படகில் வந்தனர். இவர்களை பாஸ்போர்ட் சட்டப்படி ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸார் கைது செய்து ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி உதயகலா மண்டபம் அகதிகள் முகாமிலும், கணவர் புஷ்பராஜ் திருச்சி அகதிகள் முகாமிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் உதயகலா மண்டபம் அகதிகள் முகாமில் திங்கள்கிழமை இரவு முதல் தனது 3 குழந்தைகளுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...