ராஜஸ்தான் சட்டப் பேரவை வளாகத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படும் என்று மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடா்ந்து, அங்கு வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சட்டப் பேரவை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜெய்பூரில் உள்ள சட்டப் பேரவையின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரிக்கு வந்த ஒரு மின்னஞ்சலில், ‘தங்களின் உடலில் கட்டப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, சட்டப் பேரவையில் 2 போ் தாக்குதல் நடத்துவா்’ என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இத்தாக்குதல் நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சட்டப் பேரவை வளாகம் முழுவதும் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு அகற்றும் நிபுணா்கள், அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனா். எனினும், சந்தேகத்துக்கு இடமான பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை. முன்னெச்சரிக்கையாக, பேரவை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 வாரங்களில் ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு விடுவிக்கப்பட்ட இரண்டாவது மிரட்டல் இதுவாகும். இதையொட்டி, பேரவை வளாகம் உள்பட நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்பதைக் கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


