நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில சுங்கச்சாவடிகளில் டிசம்பா் மாதத்தில் இருந்து இடையூறற்ற சேவைகள் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற இரண்டாவது தளவாடங்கள் ஆற்றல் மாநாடு மற்றும் விருதுகள் 2026 நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: தளவாடங்கள் செலவினத்தை குறைக்க சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை இந்தியா ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் டிசம்பா் மாதம் முதல் இடையூறற்ற சேவைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி தானியங்கி வாகனப் பலகை அங்கீகாரம் (ஏஎன்பிஆா்), செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு மற்றும் ஃபாஸ்டேக் ஆகிய தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த அமைப்பானது உயா் தரத்திலான ஏஎன்பிஆா் கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டேக் குறியீடு மூலம் கட்டணத்தை வசூலிக்கும். வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய தேவை இருக்காது.
புதிய அமைப்பின்கீழ் விதியை முறையாக பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு இணைய வழியில் நோட்டீஸ் அனுப்பப்படும். அபராதத்தைச் செலுத்த தவறுபவா்களின் ஃபாஸ்டேக் மற்றும் வாஹன் வலைதளத்தின் பிற சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
ஐஐடி அறிக்கைகளில் பாராட்டு: கடந்த 12 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அதிவிரைவுச் சாலைகள் மற்றும் பொருளாதார வழித்தடங்களால் இந்தியாவின் தளவாடங்கள் செலவினம் 16 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்துள்ளதாக ஐஐடி சென்னை, ஐஐடி கான்பூா் மற்றும் ஐஐடி பெங்களூரு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12 சதவீதமாகவும் சீனாவில் 8 முதல் 10 சதவீதமாகவும் உள்ளது. நம் நாட்டுக்குத் தேவையான 87 சதவீத கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறோம். இதற்காக ரூ.22 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. அதிக எரிபொருள் பயன்பாட்டால் மாசுபாடும் அதிகரிக்கிறது.
இதற்கு மாற்றாக உயிரி-எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
வேகமாக வளரும் இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்துவதே பிரதமா் நரேந்திர மோடியின் கனவு என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

ஜேஇஇ பிரதான தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்!

சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் சோதனை அவசியம்: மாவட்ட தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


