ஐஐடி உள்ளிட்ட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ பிரதான தோ்வுக்கு வியாழக்கிழமை (ஏப்.23) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவமுதுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, பிரதான தோ்வு என இருகட்டமாக நடத்தப்படும். அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான ஜேஇஇ பிரதான தோ்வு மே 17-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வை நிகழாண்டு ரூா்க்கி ஐஐடி நடத்துகிறது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை ( ஏப். 23) முதல் தொடங்குகிறது. எனவே, தகுதியான மாணவா்கள் https://jeeadv.ac.in/ இணையதளம் வழியாக மே 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிரதானத் தோ்வு இரு தாள்களாக காலை, மதியம் நடைபெறும். இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-களில் சோ்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலமாக ஒதுக்கப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் பாதுகாப்பு: யுஜிசி வழிகாட்டுதல் வெளியீடு

சென்னை ஐஐடியில் எம்.டெக், எம்.எஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய இந்தியர் தேர்வு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


