சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரியை மூட முயற்சி?எம்ஜிஆர் காலத்தில் தொடங்கப்பட்டது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியை மூடுவதற்கு, அந்த ஆலை நிர்வாகக் குழு முயற்சி மேற்கொள்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:26 pm

கே.விஜயபாஸ்கா்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூரில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியை மூடுவதற்கு, அந்த ஆலை நிர்வாகக் குழு முயற்சி மேற்கொள்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு பாலிடெக்னிக் கல்லூரி செயல்படுகிறது. கபிலர்மலை தொகுதி எம்எல்ஏவாக இருந்த வேலப்பன் கோரிக்கையை ஏற்று, கடந்த 1984-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இந்த பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ஆலை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கல்லூரியை மூட கடந்த 5 ஆண்டுகளாக ஆலை நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரிப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், இந்த ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ள ஆலை நிர்வாகம், முதலாம் ஆண்டு வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களை, ஆலைக் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிக். பள்ளிக்கு மாற்றியுள்ளது.

அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும்: இதுகுறித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரி பணியாளர்கள் சங்கக் கூட்டமைப்பு செயலர் பி. பழனிசாமி கூறியதாவது:

இந்தக் கல்லூரியில் இப்போது 17 ஆசிரியர்களும், 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 17 தாற்காலிகப் பணியாளர்களை நிகழாண்டில் வேலையில் இருந்து ஆலை நிர்வாகம் நீக்கிவிட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இல்லாத நிலையில், இந்தக் கல்லூரியை அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இந்தக் கல்லூரியை அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் என கடந்த ஆண்டு ஆலை நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பணியாளர் சங்கங்களின் தொடர் முயற்சி காரணமாக, அரசு ஏற்று நடத்த உயர் கல்வித் துறை பரிந்துரை செய்து, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி, அங்கு பரிசீலனையில் உள்ளது.

ஆலை நிர்வாகம் இந்தக் கல்லூரியை மூடிவிடுவது என்ற முடிவில் உள்ளதால், கடந்த 5 ஆண்டு காலத்தில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பெருமளவில் திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் மொத்தம் 127 மாணவர்கள் உள்ளனர். சிவில், மெக்கானிக்கல், இசிஇ ஆகிய 3 பாடப் பிரிவுகள் மட்டுமே உள்ளன. கிராமப்புற ஏழை மாணவர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி, தொடர்ந்து நடைபெற கல்லூரியை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்றார் அவர்.

தந்தையின் பெயரை நிலைத்திருக்க வைப்பாரா மகள்?: கல்லூரியைத் தொடங்க காரணமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ வேலப்பனின் மகள் சிவபாக்கியம்தான் சர்க்கரை ஆலை நிர்வாகக் குழுத் தலைவராக இருக்கிறார். தந்தை தொடங்கிய கல்லூரி அவர் காலத்தில் மூடப்பட்டது என்ற நிலை ஏற்படாமல் அவர் பார்த்துக் கொள்வதோடு, தன் தந்தையால் தொடங்கப்பட்ட கல்லூரி தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர் சர்க்கரை ஆலை விவசாயிகள்.

-கே. விஜயபாஸ்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.