/

தட்டார்மடம் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை

தட்டார்மடம்  அருகே உள்ள பிச்சிகுடியிருப்பில் ஆறுமுகமங்கலம் சுடலைசுவாமி கோயில் உள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:38 pm

கவிதன்

சாத்தான்குளம்: தட்டார்மடம்  அருகே உள்ள பிச்சிகுடியிருப்பில் ஆறுமுகமங்கலம் சுடலைசுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில் காவலாளியாக உடன்குடியைச் சேர்ந்த முத்து (70), மூக்காம்மாள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். அந்த கோயலில் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வந்து பக்தர்களுக்கு குறிச்சொல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை கோயில் காவலாளி முத்து, மூக்கமாள்மாள் ஆகியோர் வாயில் துணியை அமுக்கி, கை, கால்கள் கட்டிப்போட்டப்பட்ட நிலையில் ரத்தகாயங்களுடன் கிடந்தது.

இதனை பார்த்த அக்கிராம மக்கள் தட்டார்மடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கண்ணன், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். அதில் முத்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது.

மூக்கம்மாள் பலத்தகாயத்துடன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கோயிலின் உண்டியல் மற்றும் கதவுகள் உடைப்பட்டு கிடந்தது. கோயிலில் கொள்ளை அடிக்க வந்தவர்களா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. அஸ்வீன் கோட்னீலஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.