விழுப்புரத்தில் அதிர்ச்சி: பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி
விழுப்புரம் அருகே பள்ளியில் மயங்கி வழுந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.


விழுப்புரம் அருகே பள்ளியில் மயங்கி வழுந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகேயுள்ள ரெட்டனையைச் சேர்ந்தவர் சங்கர் மகள் மாலதி(17). இவர் ரெட்டனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், புதன்கிழமை பள்ளிக்குச் சென்றபோது வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மாலதியின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். மயக்கத்திலிருந்து எழுந்த மாலதி, வயிற்று வலியால் குவளைக் கொட்டையை எடுத்து சாப்பிட்டுவிடதாகக் கூறினாராம்.
இதையடுத்து, அவரை உடனடியாக ரெட்டனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். அங்கு, முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இரவு உயிரிழந்தார்.
இது குறித்து பெரியதச்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...