டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ராஜபாளையம் அருகே ரயில்வே நீரேற்று நிலையத்தில் திருட்டு தொடர்பாக 5 பேர் கைது

ராஜபாளையம் அருகே ரயில்வே நீரேற்று நிலையத்தில் விலையுயர்ந்த குழாய்களை திருடியது தொடர்பாக பணியாளர்கள் உள்பட 5 பேரை ரயில் பாதுகாப்பு படையினர் திங்கள்கிழமை கைது

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:45 am

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் அருகே ரயில்வே நீரேற்று நிலையத்தில் விலையுயர்ந்த குழாய்களை திருடியது தொடர்பாக பணியாளர்கள் உள்பட 5 பேரை ரயில் பாதுகாப்பு படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ராஜபாளையம் அருகே சோழபுரத்தில் பழைய ரயில் நிலையம் உள்ளது. தற்போது, இந்நிலையம் பயன்பாட்டில் இல்லை. அந்த நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரத்தில் ரயில்வே நீரேற்று நிலையம் உள்ளது. இந்த நிலையத்தை புகைவண்டி இயந்திரத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது, அந்த வகை இயந்திரம் பயன்பாட்டில் இல்லை என்பதால் பயன்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த குருசாமிராஜா என்பவர் ரயில் நிலையங்களில்  மரங்களை ஒப்பந்தம் பெற்று வேலை செய்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி நள்ளிரவில் விருதுநகர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மோகன்தாஸ் தலைமையில் ரயில்வே நிலையங்களில் ரோந்து சென்றனர். அப்போது, சோழபுரம் ரயில் நிலையத்திற்குள் இருந்து ஒரு லாரியும், ஜே.சி.பி வாகனமும் வந்துள்ளது. அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது லாரியில் நீரேற்று நிலையத்தில் பதிக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த குழாய்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் சுப்பையன், ஜே.சி.பி.முத்துகோனப்பன், ஓப்பந்தகாரர் குருசாமிராஜா ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

அதில், ரயில்வே அலுவலர் கண்ணன் உடைந்தையுடன், பணியாளர் வெள்ளைத்துரை, ரயில்வே பட்டறை தொழிலாளி எம்.சுப்பையா ஆகியோர் மேற்பார்வையில் நீரேற்று நிலையத்தில் ஜே.சி.பி வாகன உதவியுடன் 300 மீட்டர்  குழாய்களை எடுத்து லாரியில் திருட்டுத் தனமாக எடுத்து சென்றது தெரியவந்தது. அதை ராஜபாளையம் பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான இரும்பு கடையில் ரூ.1.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர். அந்த பணத்தை ரயில் பணியாளர்களான கண்ணன், வெள்ளைத்துரை, பட்டறை தொழிலாளி எம்.சுப்பையா, ஒப்பந்தகாரர் குருசாமிராஜா ஆகியோர் பங்கு பிரித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே அலுவலர் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், குருசாமிராஜா, லாரி டிரைவர் சுப்பையா, ஜே.சி.பி.ஓட்டுநர் முத்துக்கோனப்பன், இரும்புக் கடை பாலசுப்பிரமணியம், ரயில்வே பட்டறை பணியாளர் எம்.சுப்பையா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.