/

விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்ட அமைச்சர் தங்கமணி 

பரமத்தி வேலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை மீட்ட தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:01 am

பெ. விஜயபாஸ்கர்

பரமத்தி வேலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரை மீட்ட தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி மருத்துமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார். 

பரமத்திவேலூரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த காரும்,  அந்த வழியாக வந்த மோட்டர்சைக்கிளும் நல்லூர் அருகே முகசல்நாய்க்கன்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.  இதில் காரில் பயணம் செய்த திருச்செங்கோடு தண்ணீர்பந்தல்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார், கவிதா, தங்கம்மாள் ஆகிய மூவரும் மோட்டர் சைக்கிளில் சென்ற மேல்சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் படுகாயமடைந்தனர். 

அப்போது நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு அவ்வழியாக மோகனூர் நோக்கி சென்ற தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி,   விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, காயமடைந்தவர்களை திருச்செங்கோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் மருத்துவர்களை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். விபத்திலிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த  அமைச்சர் பி.தங்கமணிக்கு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்கள் நன்றி தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.