ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள அன்புமணி எப்படி ஊழலை ஒழிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா. தமாகா இளைஞர் அணி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இளைஞர் அணி மாநிலத்துணைச்செயலர் எ.அருண்பிரகாஷ் தலைமையில் நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநில பொதுச்செயலர் கே.எஸ்.ரகுநந்தகுமார், நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள் டி.அ௫ள், ஏ.வி.அ௫ள் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் து.சு.மணியன், மாவட்ட தலைவர்கள் என்.இளங்கோ, கே.செல்வகுமார், மாவட்ட செயலர் ஜி.கே.வி.கோவிந்த். உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:மாநில, மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.