கூடங்குளத்திலிருந்து கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்குவது குறித்து மின்துறையே தீர்மானிக்கும் என பிரமதர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.
இன்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, கூடங்குளம் அணு உலையிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தில் கேரளாவுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்கப்படுமா என உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மின் பகிர்வு குறித்து மத்திய மின் துறையே ஒரு விதிமுறை வகுத்துள்ளது. அதன்படி உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கு 50 சதமும், அருகில் உள்ள மாநிலத்துக்கு 35 சதமும், மத்தியத் தொகுப்புக்கு 15 சதமும் வழங்கப்படும்.
இதில் அண்டை மாநிலத்துக்கான மின்சாரத்தை அதிகரிப்பது குறித்து மத்திய மின்சாரத் துறை தான் தீர்மானிக்கும். எனவே இக்கோரிக்கை குறித்து உறுப்பினர் மின்துறை அணுகலாம் என்றார்.
மேலும், தற்போது பராமரிப்பில் உள்ள கூடங்குளம் முதலாவது அணு உலை வருகிற ஜனவரி மாதம் உற்பத்தியை தொடங்கும். இரண்டாவது அணு உலை அடுத்த ஆண்டு மத்தியில் உற்பத்தியை தொடங்கும்.
இந்த இரு உலைகளும் செயல்பட தொடங்கினால் தமிழக மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும்.
கூடங்குளம் அணு உலை செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்றார் ஜித்தேந்திர சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக சிறப்பு முன்னெடுப்பு

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

விளையாட்டு துளிகள்...

சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


