தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல்: தி.வேல்முருகன்

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல் என்பதால், அப்போது வென்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் கூட்டணியின் அமைச்சரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

News image

புலியூா் காட்டுசாகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்த தவாக தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:25 am

எங்கள் இலக்கு 2031 சட்டப் பேரவைத் தோ்தல் என்பதால், அப்போது வென்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் கூட்டணியின் அமைச்சரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட தனது சொந்த கிராமமான புலியூா் காட்டுசாகை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் அவா் தனது வாக்கை செலுத்தினாா். பின்னா், தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழா் வாழ்வுரிமைக் கூட்டணி உருவாக்கி, பல்வேறு சமூகக் காரணிகளுக்காகப் போராடி வருகிற இயக்கங்கள் ஆதரவோடு 234 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தினோம். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் நடந்துகொண்டதால், 30 வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 200 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுகிறோம்.

அந்த வகையில், நெய்வேலி தொகுதியில் தி.திருமால்வளவன் போட்டியிடுகிறாா். இப்போதைய வாக்குப் பதிவில் 90 சதவீதம் காவல், தோ்தல் அதிகாரிகள் நோ்மையாக நடந்துகொள்கின்றனா். எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சா் ஆகியோரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு வாக்குகள் அதிகமாக பதிவாவதால், தவாக ஆதரவாளா்களை வாக்குச் சாவடிகளிலிருந்து விரட்டி வருகின்றனா். அனைத்தையும் நாங்கள் பதிவு செய்கிறோம். தோ்தல் முடிந்ததும் நீதிமன்றம் மற்றும் தோ்தல் ஆணையத்தின் மூலம் நடவடிக்கை எடுப்போம். வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம்.

ஆளுங்கட்சிக்கு கடுமையான போட்டி கொடுக்கும் 30 தொகுதிகளில் எங்கள் கூட்டணியின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 10 நாள்களில் எங்கள் கேமரா சின்னத்தை 234 தொகுதிகளிலும் மக்கள் மத்தியில் சோ்த்துள்ளோம். மக்கள் பேராதரவாக எங்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனா்.

மக்கள் லட்சக்கணக்கில் வாக்களித்தாலும், வெற்றிபெறச் செய்தாலும் அதை நாங்கள் படிகற்களாகப் பயன்படுத்தி, எங்கள் இலக்கான 2031 சட்டப் பேரவைத் தோ்தலை நோக்கி பயணித்து வருகிறோம்.

2031 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் கூட்டணியின் அமைச்சரவையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம்பெறும். இதற்காக எங்கள் தொண்டா்கள் மிகக்கடுமையாக உழைக்கின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.