/

லஞ்சம், ஊழலை ஒழிக்க இளைஞர்கள் வாகன பிரசாரம்: பொதுமக்கள் வரவேற்பு

லஞ்சம், ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இரு இளைஞர்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்களை

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:55 am

தமிழ்ச்செல்வன்

லஞ்சம், ஊழலை ஒழிக்க வலியுறுத்தி இரு இளைஞர்கள் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்களை பொது மக்கள் வரவேற்றனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தெ.ஜெகதீஸ்வரன்(31) மென் பொருள் நிறுவன ஊழியர். சென்னையைச் சேர்ந்த ஆ.ஜெய்கணேஷ்(29) மருந்துக் கடை நடத்துகிறார். இவ்விருவரும் இருவரும் லோக் சத்தா அரசியல் கட்சியின் மாநிலச் செயலர், இளைஞரணிச் செயலர் பொறுப்புகளில் உள்ளனர்.

தமிழகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தவும், லஞ்சம், ஊழல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு வாகன பிரசாரம் செய்திட முடிவு செய்தனர். இதற்காக இருவரும் தங்களது பணியை விட்டு விலகி முழு நேர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இவர்களது இருசக்கர வாகன பிரசார பயணம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 13 மாவட்டங்ககளைக் கடந்து நாமக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனர். தேசியக் கொடி பொருத்திய இரு சக்கர வாகனத்தில் இருந்தவாறு ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் அவர்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேவை பெறும் உரிமைச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் குறித்து ஜெகதீஸ்வரன், ஜெய்கணேஷ் ஆகியோர் கூறியது: ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பகல் நேரத்தில் அரசு அலுவலகங்கள், மாவட்டத்தின் அனைத்து வட்டார தலைமையிடங்கள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், கடை வீதிகளில் பிரசாரம் செய்கிறோம். இரவில் ஏதேனும் ஒரு கிராமத்தில் தங்கி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டி மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் 1800-200-0909 என்ற எண்ணுக்கான இலவச மிஸ்டு கால் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இதுவரை சுமார் ஒரு லட்சம் மிஸ்டு கால்களைப் பெறப்பட்டுள்ளது. ஒரு கோடி அழைப்புகளைப் பெற்றதும் மத்திய, மாநில அரசுகளிடம் இந்த சட்டத்தை அமலாக்க வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.