என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பணி நிரந்தரம் செய்யும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் பணியை நிரக்வாகம் விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் பணியை நிரக்வாகம் விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெய்வேலி என்எல்சி பிற்படுத்தப்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலர் சிவக்குமார் வெளியிட்ட செய்தி: என்எல்சியில் பணிபுரியும் சுமார் 12 ஆயிரம் இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சுமார் கால் நூற்றாண்டு காலமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களது பணி நிரந்தரம் இதுவரையில் கேள்விகுறியாகவே உள்ளது. இந்நிலையில் பணிநிரந்தரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும் நிர்வாகம் காலம் கடத்துகிறது. இதை இச்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த மாதம் நெய்வேலியில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, ஜூன் முதல் வாரத்தில் பணிநிரந்தரத்திற்கான பணியை தொடங்குவோம் என என்எல்சி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஜூலை மாதம் தொடங்கியும் இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. பணி நியமன நடவடிக்கையை என்எல்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
கடந்த வாரம் என்எல்சி நிறுவன தலைவர் பி.சுரேந்தரமோகன் செயல் இயக்குநர் கூட்டத்தில் 200 பேர் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இது ஒப்பந்த தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளிக்கிறது. என்எல்சியில் கடைநிலை ஊழியர் முதல் உயர்நிலை வரையில் 5 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன.
என்எல்சி இன்கோசர்வ் தொழிலாளர்களுக்கு ஓய்வு வயது 58 என்பதை நிரந்தர தொழிலாளர்களை போன்று 60 ஆக உயர்த்த வேண்டும். 5 ஆயிரம் பேர் வரையில் இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
என்எல்சி இன்கோசர்வ் சொசைட்டி ஒப்பந்த தொழிலாளர்களை பாரபட்சமின்றி பணிமூப்பு அடிப்படையில் அனைவருக்கும் பணிநிரந்தர ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இம்மாத இறுதியில் டெல்லியில் மத்திய நிலக்கரி துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...