நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சீனா, தாய்லாந்துக்கு ஏற்றுமதியாகும் காரைக்கால் மெத்தை நண்டுகள்

காரைக்காலில் உற்பத்தி செய்யப்படும் மெத்தை நண்டுகள் சீனா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி

News image
Updated On :3 ஜனவரி 2024, 10:30 am

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் உற்பத்தி செய்யப்படும் மெத்தை நண்டுகள் சீனா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி பகுதியில் மத்திய அரசின் நிறுவனமான ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் மெத்தை நண்டை, இந்தியாவில் உற்பத்தி செய்யும், புதிய நுணுக்கத்தை கண்டறிந்து இந்த மையம் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து இந்த மையத்தின் உதவி திட்ட அலுவலர் கணேஷ் வெள்ளிக்கிழமை கூறியது:

இந்த மையத்தில் குட்டையில் கல் நண்டு வளர்த்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்த வளர்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சீனா, தாய்லாந்து, ஜப்பான் நாடுகளில் மெத்தை நண்டு சூப் மற்றும் இதன் மூலம் தயாரிக்கும் பலவகை கறிகள் பிரசித்தமாக உள்ளன. எனவே, இந்தியாவிலும் மெத்தை நண்டு உற்பத்தி செய்யும் நோக்கில், இந்த மையத்தில் குட்டையில் பெட்டிகள் மிதக்க விடப்பட்டு, அந்தப் பெட்டிக்குள் மெத்தை நண்டு வளர்க்கப்படுகின்றன. இதன்படி வளர்ந்த மெத்தை நண்டுகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இதை வளர்ப்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

காரைக்கால் பண்ணையில் 0.25 ஹெக்டேர் குட்டையில் மத்திய அரசு காரைக்காலுக்கு வழங்கியுள்ள 5 ஆயிரம் பெட்டிகளில், ஆயிரம் பெட்டியை மிதக்க விட்டுள்ளோம். குட்டையில் விடப்படும் நண்டு குஞ்சுகள் 80 முதல் 160 கிராம் எடை வரும்போது அது தோல் உரிக்கிறது. தோல் உரித்த நண்டுதான் மெத்தை நண்டாக குறிப்பிடப்படுகிறது. குட்டையில் வளர்க்கும் நண்டு எப்போது தோல் உரிக்கும் என்பது தெரியாததால், குட்டையில் பெட்டி மிதக்கவிடப்பட்டு, பெட்டியினுள் மெத்தை நண்டு வளர்க்கப்படுகிறது. ஒரு பெட்டிக்கு ஒரு நண்டு மட்டுமே விடப்படுகிறது. ஒவ்வொரு 4 மணி நேரமும் பெட்டியை திறந்து தோல் உரிப்பை கண்காணிக்கிறோம். பெட்டியில் விட்ட 25 நாள்களில் தோல் உரிக்கிறது. சுமார் 200 கிராம் எடையளவில் வந்த பிறகு அறுவடை செய்துவிடுகிறோம். இந்த மென்மையான நண்டு உள்நாடு, வெளிநாடு மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.

குட்டை கல் நண்டு 800 கிராம் எடை வருவதற்குள் 20 முறை தோல் உரிக்கிறது. ஆனால், அதை தெரிந்துகொள்ள முடியாது. இதை கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்ய முடியும். மெத்தை நண்டு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யலாம்.

மெத்தை நண்டு வளர்ப்பு குறித்து இலவசமாகவும், இந்திய அரசின் விதிப்படி கட்டண முறையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி பெற முன்வரலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.