நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பொங்கலுக்கு தயாராகும் மக்கள்

செங்கல்பட்டு, ஜன. 9: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டில் கரும்பும், மண் பானைகளும், அடுப்பும் விற்பனைக்கு வந்துள்ளன.  பொங்கல் பண்டிகை, வடமாநிலங்களில் ம

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:47 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு, ஜன. 9: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் செங்கல்பட்டில் கரும்பும், மண் பானைகளும், அடுப்பும் விற்பனைக்கு வந்துள்ளன.

 பொங்கல் பண்டிகை, வடமாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும் அயல்நாடுகளில் அறுவடைத் திருவிழா என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 பொங்கல் நன்னாளில் அனைத்து தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் குறிப்பிட்ட தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட போகி மேளம், மண்பாண்டங்கள் உள்ளிட்ட பொருள்களை மககள் பயன்படுத்துவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் பொங்கலன்று புதுப் பானைகளில் பச்சரிசி, பசும்பால், நெய், வெல்லம் இட்டு பொங்கலிடுவதை தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை. நாகரிக வாழக்கையில் எவர்சில்வர் பாத்திரங்களில் பலர் பொங்கல் இடுகின்றனர். ஆனாலும் மண்பானைகளில் பொங்கல் இடுவதே பாரம்பரிய பண்டிகையை மனதிருப்தியுடன் கொண்டாடுவதாக கருதும் சிலரை நம்பி மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களுக்கு ஈடாக மண்பானைகளின் விலையும் உள்ளது. அரை கிலோ பச்சரிசி இட்டு பொங்கலிடக் கூடிய பானை ரூ. 40-க்கும், மண் அடுப்பு ரூ. 50 முதல் ரூ. 100 வரையும் விற்கப்படுகிறது. கரும்பு ஒரு கழி ரூ. 25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 20 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று மொத்த விலையில் ரூ. 350 முதல் ரூ. 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. தானே புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கரும்பு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

 எது எப்படியிருந்தாலும் பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கலிட்டு மஞ்சள் கரும்புடன் படைத்து வழிபடுவதே உண்மையான வழிபாடு. அது மட்டும் அல்லாமல் மண்பாண்ட தொழிலையே நம்பி அந்த தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் திருநாளாக கார்த்திகை திருநாளும், பொங்கல் திருநாளும் உள்ளன.

 மேலும் பள்ளி கல்லூரிகளிலும் பொங்கல் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில் சமத்துவ பொங்கலும் பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவையொட்டி காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, திருமணி பகுதிகளில் வாழும்மண் பாண்ட தொழிலாளர்கள் பானை மற்றும் அடுப்புகள் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் செய்யும் அடுப்பு, மண் சட்டி, பானைகள் சென்னை, மற்றும் தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பானை மற்றும் அடுப்பு தயாரிக்கும் பணிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இவர்கள் தொடங்கிவிட்டனர்.

 தமிழர் திருவிழாக்களில் முதன்மையும் பெருமையும் வாய்ந்தது பொங்கல் திருவிழா. நாகரிகங்கள் மாறினாலும் பாரம்பரியம் மாறுவதில்லை என்பதை காட்டக் கூடிய வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.