ஆய்வரங்க நிகழ்ச்சிகளில் கட்டுரையாளர்கள், பேராளர்கள், வெளிநாட்டு அறிஞர்கள் என ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் பங்கேற்பர் எனத் தெரிகிறது. ஆய்வரங்குகளில் பங்கேற்பவர்களுக்கு தங்கும் இடத்தில் இருந்து மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்கு வால்வோ பஸ்களில் அழைத்து வரப்படுவர். குடியரசுத் தலைவர், பிற மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் என மிக முக்கிய விருந்தினர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.