ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பள்ளிக்குச் செல்லாதவர்கள் 60 ஆயிரம் பேர்

சென்னை, ஏப்.22: தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாதவர்கள் (6 வயது முதல் 14 வயது வரையிலானவர்கள்) சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டம் 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமல

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:36 pm

ஆர். ஆதித்தன்

சென்னை, ஏப்.22: தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாதவர்கள் (6 வயது முதல் 14 வயது வரையிலானவர்கள்) சுமார் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டம் 2010 ஏப்ரல் 1-ம் தேதி அமலானது. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள, பள்ளிக்குச் செல்லாத சிறுவர்களை கண்டறிந்து இலவசக் கல்வி அளிப்பதே இதன் நோக்கமாகும்.

இந்தியாவில் மட்டும் 6 வயது முதல் 14 வயது வரையுள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடி பேர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 92 லட்சம் பேர் பள்ளிக்குச் செல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களைக் கண்டறிந்து இலவசக் கல்வி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் வலியுறுத்தியிருந்தார்.

இதன்படி படிப்பறிவு பெறாத மற்றும் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் பற்றியக் கணக்கெடுப்பு மாநிலம் வாரியாக நடந்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்கள் குறித்த கணக்கெடுப்பு அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வட்டார வள மையப் பொறுப்பாளர்கள் 6 ஆயிரம் பேர், ஆசிரியர்கள் 5,000 பேர் உள்பட 13 ஆயிரம் பேர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின் முடிவில் மாநிலத்தில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (6 வயது முதல் 14 வயது வரையுள்ளவர்கள்) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 5,400 பேரும், வேலூரில் 4,501 பேரும் என்பது தெரியவந்துள்ளது. சேலத்தில் 3,066 ,சென்னையில் 3,000, விருதுநகரில் 3,319, திருநெல்வேலியில் 2,953, திருவண்ணாமலையில் 3,558 என கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது:

படிப்பை பாதியில் நிறுத்திய மாற்றுத் திறன் கொண்டவர்கள் குறித்தும் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை அடுத்தக் கட்டமாக அனைவருக்கும் கல்வி திட்டத்தில் உள்ள மாற்றுத்திறன் படைத்தோருக்கான ஒருங்கிணைந்தக் கல்வித் திட்டத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்குச் செல்லாதவர்கள் குறித்த முழுவிவரப் பட்டியல் மே 15-ம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும். அதன்பின்னர் ஜூன் மாதத்தில் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.