டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சர்ச்சையில் மதுரை "ஒலி-ஒளி' காட்சி: திருட்டை ஊக்குவித்தாரா திருமலை நாயக்கர்?

மதுரை, அக். 10:    மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டப்படும் "ஒலி-ஒளி' காட்சியில் "திருட்டில் ஈடுபட்டவரை' ஊக்குவித்து மன்னர் பரிசளிப்பதாக உள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளத

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:54 pm

ஜெயப்பாண்டி

மதுரை, அக். 10:    மதுரை திருமலைநாயக்கர் மகாலில் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டப்படும் "ஒலி-ஒளி' காட்சியில் "திருட்டில் ஈடுபட்டவரை' ஊக்குவித்து மன்னர் பரிசளிப்பதாக உள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  ஒலி-ஒளிக் காட்சியில் திருமலை நாயக்கர் மகால் உருவான விதமும் மன்னரின் கலை ஆர்வமும் தொடக்கத்தில் விளக்கப்படுகிறது. பின்னர் போர் நடத்தியது, தெப்பக்குளத்தை உருவாக்கியது, கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் என காட்சிகள் தொடர்கின்றன.

  கதை கூறும் நோக்கிலும், திருமலை மன்னரே பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு மனதை மயக்கும் பின்னணி இசையுடன், வண்ண விளக்குகள் ஒளிருவது குழந்தைகளை வெகுவாகக் கவர்வதாக உள்ளது.

  மன்னர் வேட்டை நிகழ்வும், அதில் புலியைக் கொன்றவருக்கு 7 கிராமங்கள் பரிசளித்த பெருமையும் கூறப்படுகிறது. அடுத்து, மீனாட்சியம்மன் சிறுமியாக வந்து தமிழ்ப்பாடலை ரசித்ததும் விளக்கப்படுகிறது.

  இதையடுத்து வரும் காட்சிதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  நாயக்கர் மகாலில் திருடர்கள் புகமுடியாது என அதைக் கட்டிய தச்சர்கள் கூறியதாகவும், இதைச் சோதிக்க எண்ணிய மன்னர், ""மகாலுக்குள் யாராவது நுழைந்து திருடினால் பரிசளிக்கப்படும்'' எனக் கூறியதாகவும் காட்சி அமைகிறது.

  பின்னர், உடும்பைப் பயன்படுத்தி ஒருவர் மகால் சுவரில் ஏறி உள்ளே குதித்ததாகவும், பலத்த காவலையும் மீறி மகாலுக்குள் நுழைந்ததாகவும் அவரை மன்னர் பாராட்டிப் பரிசு அளித்ததாகவும் காட்சி உள்ளது.

  அப்போது "திருட்டு' என்பது கலை, அதற்குத் திறமை வேண்டும் எனவும் வசனம் உள்ளது. இதே வசனம் ஆங்கிலக் காட்சியிலும் இருக்கிறது.

  எனவே நிகழ்ச்சியைப் பார்க்கும் வெளிநாட்டவர், திருட்டை ஊக்குவித்தாரா மன்னர், எப்படி அது சரி எனக் கேள்விமேல் கேட்பதாக சுற்றுலாத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.

  எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கும்போது மன்னரது பெருந்தன்மையையும், மதிநுட்பத்தையும் காட்டுகிறோம் என்ற பெயரில், வரலாற்று ஆதாரமில்லாத இதுபோன்ற செவிவழிச் செய்தியை காட்சியாக அமைத்திருப்பது தேவையற்றது என்பது தொல்லியல் துறையினர் கருத்தாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.